விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டுபிடிப்பு – அந்நாட்டு அரசு அறிவிப்பு.!

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான “போயிங் 737” மாடல், SJ182 என்று அழைக்கப்படும் விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம், 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.  ஜாவா கடற்பரப்பில் விழுந்ததாக சந்தேக்கம் எழுந்ததை தொடர்ந்து தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, ஜாவா கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்று மீனவர்கள், கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை கண்டெத்துள்ளனர். இதையடுத்து அந்த பாகங்கள், மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், பயணம் செய்தவர்களின் நிலை குறித்து தற்பொழுதுவரை எந்தொரு தகவல்களும் வெளிவரவில்லை.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜோனோ தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கருப்பு பெட்டிகளை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று இராணுவத் தலைவர் ஹாடி தஜ்ஜான்டோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்