கீழடி அகழாய்வு.. கொந்தகையில் 5 அடி உயர முழு எலும்புக்கூடு கண்டெடுப்பு!

கீழடி அகழாய்வு.. கொந்தகையில் 5 அடி உயர முழு எலும்புக்கூடு கண்டெடுப்பு!

கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வில் 5 அடி உயரமுள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில்
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் 7 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அதில் 14 முதுமக்கள் தாழிகழும், 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில், கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வில் 5 அடி நீளமுள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அந்த எலும்புகூடுகளை ஆய்வு செய்வதன் மூலம், அதன் காலத்தை கண்டறிய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Join our channel google news Youtube