கொரோனா அதிகம் உள்ள இந்த 11 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்- முழு விவரம்..!

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டும் அதே நேரத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கபப்ட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மற்றும் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர் (Electriclans), பிளம்பர்கள் (Plumbers). கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர். எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.
  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 7.00 மணி முதல் பதியம் 2,00 மணி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாடகை வாகனங்கள் டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன்நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
author avatar
murugan