சிம்புவுக்கு பத்து தல படத்தில் வில்லனாகும் இயக்குனர் கவுதம் மேனன்!

சிம்பு நடிக்கவுள்ள பத்து தல படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு தொடர்ச்சியாக தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த  ஈஸ்வரன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல், முஃப்தி எனும் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழிலும் இதனை ரீமேக் செய்கின்றனர்.

சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாகும் தமிழ் ரீமேக்கில் கௌதம் கார்த்திக், நடிகர் சிம்பு, நடிகை, பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்கின்றார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு பத்து தல என பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த படத்தில் கவுதம் மேனன் தான் வில்லனாக நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Rebekal