நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம்!! பேட்ட படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் பெருமிதம்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரமாண்டமாக வெளியாகி  இருந்த திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்துடன் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

இந்த இரு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தற்போது தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.

அதில், ‘ நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் வெளியாகிவிட்டது. வெகு நாட்களுக்கு பிறகு தியேட்டரில் இருந்து மகிழ்சியுடன் வெளிவந்தேன். இந்த மாதிரியான ரஜினி படத்தை எடுத்ததற்கு கார்த்திக் சுப்புராஜிற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

DINASUVADU