தினகரன் எடுக்கும் முடிவு …!எதிர்க்கட்சிகளின் கட்டாயத்தால் தேர்தலை சந்திக்கும் தினகரன் அணி …!

எதிர்க்கட்சியினர் கோரிக்கையை பின் பற்றும் தினகரன்.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
Image result for ttv dinakaran
இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்  18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் தினகரன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில், மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்தனர் .ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.18 பேரின் நலனும், கட்சியின் நலனும், மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே ஆகும்.  தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியினர் பலரும் மேல்முறையீடு செய்யாமல் 18 பெரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related image
தற்போது அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்தனர் என்று தினகரன் தெரிவித்தார்.
ஆதலால் தேர்தலை சந்திக்க தினகரன் முடிவு செய்த நிலையில்  எதிர்க்கட்சிகள் நிர்பந்தத்திற்கு பணிந்துவிட்டாரா டிடிவி தினகரன் ? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் வெகுவாக எழுந்துள்ளது.

Leave a Comment