தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை …! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சரான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதன் பின்னர்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சரான பன்னீர்செல்வம் கூறுகையில்,அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது.அதேபோல் தினகரன் தனி கட்சி தொடங்கிவிட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.கட்சியில் சசிகலா புதிதாக சேர்க்கப்படவில்லை. அவர் அ.தி.மு.க.வில் இல்லை. அவர் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.