டிஜிட்டல் வசந்தமாளிகை திரைப்படம் வெளியீடு! 50 அடி கட்வுட்-க்கு ரசிகர்கள் பாலபிஷேகம்!

நடிகர் சிவாஜி கணேஷன் மறைந்த பழம்பெரும் இந்திய நடிகர் ஆவார். இவர் பராசக்தி எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது நடிப்பில் 46 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்று வசூலை குவித்த படம் தான் வசந்தமாளிகை.
இந்நிலையில், இவரது இந்த வசந்தமாளிகை திரைப்படம், தற்போது டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டு  ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழகமெங்கும் 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகர் சிவாஜி கணேசனின் 50 அடி கட்டவுட் வைத்து ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.