சீனா மீது நடத்தப்பட்ட டிஜிட்டல் தாக்குதல் - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.!

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம்  15-ம் தேதி நடைபெற்ற

By murugan | Published: Jul 02, 2020 08:26 PM

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம்  15-ம் தேதி நடைபெற்ற இந்திய,சீனவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம். சீன தரப்பில் ஏற்பட்ட உயிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக சீனா அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக பதட்டம் தணிந்து வருகிறது. சமீபத்தில், சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த வெர்சுவல் பாஜக பேரணியில் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தகவலைப் பாதுகாக்க சீனாவின் ஆப்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், இது ஒரு டிஜிட்டல் ஸ்டிரைக், இந்தியா அமைதியை விரும்பும் நாடு, யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc