உங்க வீட்டுல உருளைக்கிழங்கு இருக்கா…? உடனே இத செஞ்சி பாருங்கள்!

உங்க வீட்டுல உருளைக்கிழங்கு இருக்கா…? உடனே இத செஞ்சி பாருங்கள்!

உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் உருளைக்கிழங்கில் புது விதமான அட்டகாசமான சுவைகொண்ட உணவு ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • வெங்காயம்
  • மிளகு
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பில்லை
  • அரிசி மாவு
  • மைதா மாவு
  • கறிவேப்பில்லை

செய்முறை

முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும். அதன் பின்பதாக அந்த துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு ஒரு முறை அலசி கொள்ளவும். பின் இதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

பின், இதனுடன் அரிசி மாவு, மைதா மாவு, கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பின்பதாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் உருளைக்கிழங்கு கலவையை வட்டமாக தட்டியெடுத்து பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும். இதை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள் நிச்சயம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube