திமுகவில் இருந்து அழைப்பு வந்ததா ? மு.க. அழகிரி விளக்கம்

திமுகவில் இருந்து அழைப்பு வந்ததா ? மு.க. அழகிரி விளக்கம்

இன்று கோபாலபுரம் சென்ற அழகிரி , திமுகவில் இருந்து அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

திமுகவின் முன்னாள் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் திமுக தலைவராக பதவியேற்றார்.

இதனைத்  தொடர்ந்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார் அழகிரி.ஆகவே அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக அழகிரி தரப்பில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.மேலும் பாஜகவில் இணைய உள்ளார் என்றும் தகவல் வெளியாகியது.தொடர்ச்சியாக தகவல்கள் வந்த நிலையில் ,நான் பாஜகவில் சேரவுள்ளேன் என சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அழகிரி கூறினார்.

இந்நிலையில் இன்று திடீரென்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து அறிய கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.அழகரி சென்றார்.இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை.அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube