மாணவர்களின் கையை காவல்துறையினர் உடைத்தார்களா?கடுமையாக சாதிய நெட்டிசன்கள்!

சென்னை பச்சையப்பா கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் நேற்று முன்தினம்  அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தவர்களை பயமுறுத்தியதும்  ஒரு மாணவனை தாக்கியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனை அறிந்த காவல்துறையினர் அந்த 2 மாணவர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், பச்சையப்பா கல்லூரி முதல்வர் அந்த மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த 2 மாணவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர்களின் கைகள் கட்டு போட்டிருப்பது போல் உள்ளது. மேலும் காவல்துறையினர் அந்த மாணவர்களை தாக்கியிருக்கலாம் தான் என்று ஒரு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது நேற்று நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கைகள் முறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காவல்துறையினர் கீழே விழுந்து உடைந்துள்ளதாக    கூறியுள்ளனர்.காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளுக்கு என்ன நடந்தாலும் காவல்துறையினர் தான் பொறுப்பு.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல்!என்று கூறியுள்ளார்.இவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும், நடுரோட்டில் கத்திகளோடு ரௌடிதனம் செய்தும், பயணிகளை பயமுறுத்தியும், சக மாணவர்களையும் தாக்கியவர்கள் மாணவர்களே இல்லை சமூக விரோதிகள்.

இவர்களுக்கு முட்டுக்கொடுப்பது தேவையில்லாத செயல் என்று கூறியுள்ளனர்.அதற்கு சரவணன் அண்ணாதுரை கூறியதாவது போலீஸ் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்கள் தேவையில்லை.

யாருக்கு என்ன சட்டம் என்று நம் சட்டம் சொல்கிறது.எந்த சட்டம் கையை உடைக்க சொல்கிறது?நாளை வாகனத்தை மஞ்சள் கோட்டை தாண்டி நிறுத்தினால் காவல்துறையினர்  காலை உடைத்தால் சரியென்று சென்று விடலாமா?என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.