” சர்வாதிகாரத்தை அகற்றி ஜனநாயகத்தை காப்போம் ” மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்…!!

12
டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கண்டன பொதுக்கூட்டம் எதிர்க்கட்சிகள் ஓரணியில் அமைவதற்கான அடிப்படையில் தான் நடைபெறுகிற்றது.
ஏற்கனவே மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்றையதினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டமானது   சர்வாதிகாரத்தை அகற்றுவோம் ஜனநாயகத்தை காப்போம் என்ற ஒரு தலைப்பை  நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யும் வகையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் , பல்வேறு மாநில கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பாக மத்திய அரசுக்கு எதிராக இருந்த பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்