ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

டிக்கிலோனா திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில், தற்போது சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.