இந்தியாவில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் சர்க்கரை நோய் தான். இது நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதற்க்கு பல மருத்துவம் செய்தாலும், அப்போது அந்த நோயிலிருந்து ஓரளவு விடுதலை பெற்றாலும், மீண்டும் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடுகிறது.

நீரிழிவு நோயை அடியோடு அழிக்க சிறுகுறிஞ்சான் இலை பயன்படுகிறது.  இந்த இலையில் டீ செய்து குடித்து வர நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகும் என்று ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

தேநீர் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை : 

இந்த இலையை பவுடராகவோ, மாத்திரையாகவோ அல்லது இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்தோ பருகலாம்.

இந்த இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு அந்த தண்ணீரை வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும் அல்லது இந்த இலையில் பவுடரை வெந்நீரில் போட்டு கூட குடிக்கலாம்.

இந்த தேநீரை காலையில் சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு குடிக்க வேண்டும்.