பெங்களூரை வீழ்த்தி.., மீண்டும் முதலிடத்தை தட்டி தூக்கிய தோனியின் சூப்பர் கிங்ஸ்..!

சென்னை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இன்று ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி, பெங்களூரு அணி தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பாக விளையாடிய கோலி 53 ரன்கள் அடித்திருந்த போது பிராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த படிக்கல் 70 ரன்களை விளாசி பெவிலியன் திரும்ப அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியற இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து.  சென்னை அணியில் பிராவோ 3, ஷர்துல் தாக்கூர் 2, தீபக் 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால், 157 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் சாஹல் வீசிய பந்தில் கோலியிடம் கேட்சை கொடுத்து 38 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலே டு பிளெசிஸ் சைனியிடம் கேட்சை கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய மெயின் அலி வழக்கம்போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சிக்ஸர் என மொத்தம் 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர், களம் கண்ட அம்பதி ராயுடு 32 ரன்கள் எடுக்க இறுதியாக சென்னை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், 2-ம் இடத்தில் இருந்த சென்னை 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

author avatar
murugan