தோனியின் நாட்டு பற்றுக்கு ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!

தோனியின் நாட்டு பற்றுக்கு ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியைக் காட்டிலும் இன்று சமுக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருவது நேற்றைய போட்டியில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவரது பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரை யான “பாலிதான்” இருந்தது. அந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் செய்வது ஆகும். 2011-ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப் பட்டது.மேலும் 2015-ம் ஆண்டு அவர் பாராமிலிட்டரில் பிரிவில் சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டார்.

இந்நிலையில் தோனியின் இந்த செயலுக்கு  ட்விட்டரில் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் ட்விட்டரில் ஒரு தரப்பு ரசிகர்கள் “இதனால் தான் உங்களை எங்களுக்கு  ரொம்பவும் பிடிச்சி இருக்கு” எனவும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் “தோனியின் நாட்டு பற்றுக்கு சல்யூட்” எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube