29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா...

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

விளம்பர விதிகளை மீறிய பிரபலங்களின் பட்டியலில் தோனி முதலிடம்..! ஏஎஸ்சிஐ தகவல்..!

விளம்பர விதிகளை மீறிய பிரபலங்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளதாக ஏஎஸ்சிஐ (ASCI) தெரிவித்துள்ளது.

பிரபலங்களுக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விளம்பரத் தரக் கவுன்சில் (ASCI) தெரிவித்துள்ளது. அதில் விளம்பர விதிகளை மீறிய பிரபலங்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் எம்எஸ் தோனி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, பிரபலங்கள் விளம்பர விதிகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு நிதியாண்டில் பிரபலங்களுக்கு எதிரான புகார்களில் நம்பமுடியாத அளவிற்கு 803% உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 55 விளம்பரங்கள் மட்டுமே புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பத்துக்கும் மேற்பட்ட விதிமுறைகளை மீறியதால் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.