தல தோனிக்கு கொரோனா தொற்று இல்லை.. பயிற்சி ஆட்டத்துக்கு ரெடி!!

தல தோனிக்கு கொரோனா தொற்று இல்லை.. பயிற்சி ஆட்டத்துக்கு ரெடி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா இல்லையென உறுதியானது.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 -ம் தேதி நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்திற்காக நாளை சென்னை புறப்படவுள்ளார் தோனி.

பிசிசிஐ விதிமுறைகளின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதனைக்கேட்ட தோனியின் ரசிகர்கள், அவரின் ஐபிஎல் ஆட்டத்தை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.