பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!

நேற்று டெல்லி அணியும், சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய டெல்லி அணி 175 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய சென்னை அணி 131 ரன்கள் எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்த நிலையில், போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த கேப்டன் தோனி, சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை , இது எங்களுக்கு ஒரு நல்ல விளையாட்டு என்று நான் நினைக்கவில்லை.

ஆனால், விக்கெட் குறைந்தது இதுபோன்ற மெதுவான துவக்கங்களுக்குப் பிறகு ரன் வீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் ,அழுத்தம் அதிகரிக்கிறது, அதை  கண்டுபிடிக்க வேண்டும் என தோனி கூறினார். அடுத்த ஆட்டத்தில் ராயுடு திரும்பி வந்தவுடன் அணி சமநிலை மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒரு கூடுதல் பந்து வீச்சாளர் இடம் பெறுவார் என தெரிவித்தார்.

Latest Posts

#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!
#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!
ஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்
ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு!
#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..!
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?
அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி!
விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு