பரபரப்பு..!தருமபுரி அருகே நடந்த சம்பவம்-தடம் புரண்ட பயணிகள் ரயில்!

தருமபுரி:முத்தம்பட்டி அருகே நடுவழியில் கன்னூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு.

வடகிழக்கு பருவ மழையினால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கியுள்ளது.

இந்த நிலையில்,கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூருக்கு இன்று அதிகாலையில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.இந்த ரயில் தருமபுரி முத்தம்பட்டி அருகே வந்தபோது நடுவழியில் அங்கு மண்சரிவினால் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மீது மோதியது.இதனால்,கண்ணூர் – யஷ்வந்த்பூர் விரைவு பயணிகள் ரயிலின் முன்பெட்டிகள் தடம் புரண்டது.

இதன்காரணமாக,4 மணி நேரமாக பயணிகள் தவித்துள்ளனர்,ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து மீட்பு பணிகளுக்கான பிரத்தியேக ரயில் வந்த பின்பு தண்டவாளம் சரி செய்யும் பணி தொடங்கும் எனவும்  ரயிலில் வந்த 1,850 பயணிகளும் காயமடையாமல் பத்திரமாக உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.