தர்மத்தை நிலைநாட்டும் ஆட்டம் ஆரம்பம் – ருத்ரதாண்டவம் டிரெய்லர் அப்டேட்.!

ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார். 

திரௌபதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் அடுத்ததாக “ருத்ர தாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார்.

இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த மாதம் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது  படத்தின் டிரெய்லர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “ருத்ர தாண்டவம்” படத்தின் டிரெய்லர் நாளை மாலை 05:06 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் மோகன்  அறிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.