டாக்டர் படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் பதில்.!

வீட்டில் பாதுகாப்பாக இருந்து அமேசான் பிரேமில் ஒளிபரப்பாகும் ஹீரோ படத்தை

By ragi | Published: May 28, 2020 04:39 PM

வீட்டில் பாதுகாப்பாக இருந்து அமேசான் பிரேமில் ஒளிபரப்பாகும் ஹீரோ படத்தை பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். தற்போது இவர்  இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'இன்று நேற்று நாளை ' படத்தை இயக்கிய ரவிக்குமாரின் 'அயலான்' படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் 'டாக்டர்' படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் டாக்டர் படம் முதலில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர். ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். 

கடைசியாக இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்திடம் டாக்டர் படம் குறித்த அப்டேட்களை கேட்க, தற்போது டாக்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது.

மேலும் அதில், அப்டேட் கேக்குறது ஈஸி, குடுக்கிறது தான் கஷ்டம், டாக்டர் மற்றும் அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க லாக்டவுன் முடிவடைவதற்காக காத்திருக்கிறோம் என்றும், லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட்ஸ் எல்லாம் அள்ளும் பாருங்கள் என்றும் கூறியுள்ளார். அதுவரை வீட்டில் பாதுகாப்பாக இருந்து அமேசான் பிரேமில் ஒளிபரப்பாகும் ஹீரோ படத்தை பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc