படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க.. கர்ணன் இயக்குனரை பாராட்டிய பிரபலம்.!

தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

By ragi | Published: May 28, 2020 04:21 PM

தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் "கரணன்" மற்றும் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் கர்ணன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தாணு அவர்கள் தயாரிக்கிறார். இதில் ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்ராஜ், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது. இப்படத்தின் கதை, திருநெல்வேலியில் தற்போதும் நிலவி வரும் ஜாதிய பிரச்சினைகளை மையமாக கொண்டதாகும்.

இந்த  33படத்தின் படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த படம் குறித்து நட்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, மாரி செல்வராஜ்  ஆக சிறந்த இயக்குநர். படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் உங்கள் பிரியத்திற்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி சார் என்று தெரிவித்துள்ளார். தற்போது தனுஷ் ரசிகர்கள் அவரின் படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

Step2: Place in ads Display sections

unicc