தனுஷின் புதுப்பேட்டை - 2 படத்தின் மாஸ்ஸான அப்டேட்.! ரசிகர்கள் செம வெயிட்டிங்.!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதுப்பேட்டை 2 படத்தை இயக்குநர் செல்வராகவனுடன்

By ragi | Published: Jun 18, 2020 06:30 AM

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதுப்பேட்டை 2 படத்தை இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து தனுஷூம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் டீ ஜெய் ரவீக் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருந்தார் இயக்குநர் செல்வராகவன். இதிலும் தனுஷ் அவர்களே நடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தினை குறித்த மாஸ்ஸான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் புதுப்பேட்டை 2 படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குநர் செல்வராகவனுடன் உடன் திரைக்கதையை எழுதுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேட்டதிலிருந்து புதுப்பேட்டை 2க்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்', மாரி செல்வராஜின் இயக்கத்தில் 'கர்ணன்' மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc