தமிழ் சினிமாவில்  யோகி பாபு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது உள்ள அனைத்து பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இவர் தனது முக அமைப்பாலும் , நடிப்பாலும் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் வருடத்திற்கு 10 முதல் 20 படங்களில்  நடித்து வருகிறார்.

தற்போது ஹீரோவாக யோகி பாபு களமிறங்கி உள்ளார்.இயக்குனர் ஷாம் அன்டன் தயாரிப்பில் , இயக்கத்தில் உருவாகி உள்ள “கூர்கா” திரைப்படத்தில் யோகி பாபு நடித்து உள்ளார்.இப்படத்தின் டீசரை  நடிகர் தனுஷ் வெளிட்டுள்ளார்.இப்படத்திற்கு ஷாம் அன்டன் இசையமைத்து உள்ளார்.

தற்போது இப்படத்தின் டீசர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.