இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் “மாறன்”..!

தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தின் முழு படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளது. 

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் “மாறன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், தற்போது மாறன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக டீசர், பர்ஸ்ட் சிங்கிள், ரிலீஸ் தேதி போன்ற அப்டேட்டுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.