ட்விட்டரில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த தனுஷ்.!

ட்விட்டரில் 10 மில்லியன் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கையை வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் தனுஷ். இயக்குநர், நடிகர், பாடலாசியர், பாடகர்,  தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட தனுஷ் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்ற பெற்ற ரௌடி பேபி பாடல் யூடியூபில் 10 மில்லியனிற்கும் மேலாக பார்வையாளர்களை கடந்துள்ளது. தனுஷே எழுதி அவரே யுவன் இசையில், பாடியிருந்தார். இதுவரை எந்த தமிழ் திரைப்படத்தின் பாடலும் 10 கோடி பார்வையாளர்ளை கடந்ததில்லை. முதன் முதலாக ரௌடி பேபி பாடல் அந்த சாதனையை நிகழ்த்தியது.

இதைபோல் ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் பிரபலங்களின் பட்டியிலில் முதலிடத்தை பிடித்து நடிகர் தனுஷ் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துவிட்ட தனுஷை தற்போது 1 கோடி பேர் பின்பற்றுகின்றார்கள்.

இதனை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில், #10MillionFollowersForDhanush என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.