9 வாரம் இந்த மாலையை விநாயகருக்கு அணிந்து உங்கள் வேண்டுதலை வைத்தால், வேண்டியது நிறைவேறும்..!

Published by
Sharmi

விநாயகருக்கு 9 வாரங்கள் இந்த இலையில் மாலை அணிவித்து வேண்டினால், நீங்கள் வேண்டியது நிறைவேறும்.

விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் நம் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை மனதார வைத்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மாலையை அணிவித்து வேண்டி பாருங்கள், நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்வில் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். இந்த வேண்டுதலுக்கு தேவையானவை 27 செம்பருத்தி இலைகள். இந்த இலைகளில் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதனை சுருக்கி ஒரு வரியில் பேனாவால் இலை கிழியாமல் எழுதி கொள்ள வேண்டும்.  உதாரணமாக, பணவரவு அதிகரிக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணம் நடைபெற, நல்ல உத்தியோகம் கிடைக்க, ஆரோக்கியம் பெற என அந்த இலையில் எழுதி கொள்ளுங்கள்.

இந்த இலையை சுருட்டி சிவப்பு நிற நூல் கொண்டு மாலை கட்டி கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமையில் காலை 6 மணிக்கு இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். அன்று சுத்தபத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, உங்கள் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்திற்கு செம்பருத்தி இலை மாலையை அணிவித்து விநாயகர் முன்னால் தீபம் ஏற்றி மனதார உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும். எந்த வேண்டுதலை நீங்கள் இலையில் எழுதி வைத்து பிள்ளையாருக்கு அணிவித்தீர்களோ அதனை நன்கு வேண்டி கொள்ளுங்கள். இதேபோன்று ஒன்பது வாரமும் பிள்ளையாருக்கு செம்பருத்தி இலையில் மாலையை அணிவித்து வேண்டுதலை வைக்க வேண்டும். ஒன்பது வாரமும் ஒரே வேண்டுதலை செம்பருத்தி இலையில் எழுதி சாமியிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

ஒன்பதாவது வார இறுதியில் நீங்கள் நினைத்த காரியம் கைக்கூடி வந்ததை நீங்களே காண்பீர்கள். நம்பிக்கையோடு இந்த வேண்டுதலை செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் விநாயகர் சிலை இருந்தால் அந்த சிலைக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபடலாம். மேலும், பிள்ளையார் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து இந்த வேண்டுதலை நீங்கள் துவங்குவது சிறப்பு  தரும். வீட்டிற்கு அருகில் அரசமரத்தடி பிள்ளையார் இருந்தால் அங்கே சென்று செம்பருத்தி இலை மாலை அணிவித்து வேண்டினாலும் நீங்கள் வேண்டியது நிறைவேறும். செம்பருத்தி இலை செவ்வாய்க்கிழமை தேவைப்படுவதால் திங்கள் கிழமை அன்றே பறித்து வைத்து கொள்ளலாம். அதேபோல் சாமிக்கு மாலை அணிவித்த பிறகு மறுநாள் புதன்கிழமை காலையில் யாரும் கால் படாத இடத்தில், செடி, கொடிகளில் இந்த மாலையை போட்டு விடலாம்.

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

20 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago