சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…

Published by
K Palaniammal

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் கடவுள் சபரிமலை என்ற திருத்தளத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஐயப்பன். தண்ட காருண்ய வனத்து மகரிஷியின் ஆணவத்தை குறைக்க ஹரிக்கும் ஹரனுக்கும்  பிறந்தவர்.  பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கக் கூடிய இந்த தெய்வம் சின் முத்திரையுடன் யோக பட்டை அணிந்து காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நாம் என்ன பிரார்த்தனை செய்கிறோமோ அத்தனையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முறையான விரத நாட்கள்

முந்தைய காலகட்டத்தில், தை மகர ஜோதிக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து பயணம் செய்து வந்தனர் . இது அதிக நாட்களைக் கொண்டிருப்பதாலும் கூட்ட நெரிசல்கள் காரணமாகவும் மாதம் தோறும் ஐந்து நாட்கள் நடை திறக்கப்படும் அந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் வந்து போக ஆரம்பித்துள்ளனர்.

ஐயப்ப வழிபாடு என்பது கேரளாவிற்கு மட்டுமே தெரிந்து ஒன்றாக இருந்தது. பந்தள  மன்னருக்கு வளர்ப்பு  மகனாக இருந்ததால் பந்தள  தேசத்தின் பாரம்பரியத்தில் வந்த காரணத்தால் கேரள மக்களுக்கு மட்டுமே அறிந்த கடவுளாக ஐயப்பன் விளங்கினார். பிறகுதான் தமிழகத்திலும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு மக்கள் பயணம் மேற்கொண்டனர்.

வீட்டில் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல் இருக்கா? இதோ அதற்கான தீர்வு…

முறையாக இது ஒரு மண்டலமாக விரதம் இருப்பது தான் சரியான முறையாகும். ஒரு சிலர் இதுவும் அதிகமாக இருப்பதாக கூறி அரைமண்டலமாக இருப்பார்கள். ஒரு சில ஒரு வாரம் கூட இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆனால் ஒரு மண்டல காலம் என்பதே முறையான விரத முறை ஆகும்.

மாலை அணிந்த பிறகு செய்ய வேண்டியவை

காலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் தான் குளிக்க வேண்டும் .பிறகு சுவாமிக்கு பூ அணிந்து ஏதேனும் ஒரு பழம் நிவேதனமாக வைத்து நெய் விளக்கு ஏற்றி  108 சரணம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணத்தை நம் அடி வயிற்றிலிருந்து உச்சரிக்கும் போது அது நம் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் மகிழ்ச்சியை பெற்றுத்தரும். இதன் பிறகு தான் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடை

மாலை அணிவித்த பின் காவி உடைகளை மட்டுமே அணிய வேண்டும். முதல் முறையாக கன்னி சுவாமியாக இருந்தால் கருப்பு நிறத்தில் மட்டுமே ஆடைகளை அணிய வேண்டும். அலுவலகத்திற்கு செல்பவர்களாக இருந்தால் எப்போதும் போல ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

காலனி அணிந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சபரிமலைக்கு செல்லும் வழி கரடு முரடாக இருக்கும் அதற்கு பயிற்சியாக இருக்கவே இந்த விரத நாட்களில் காலணிகள் அணிவதில்லை. மேலும் அது நம் பாதத்திற்கு ஒரு அக்கு பஞ்சராக கூட செயல்படுகிறது. மற்றவர்களுடன் பேசும்போது மரியாதை கடைப்பிடித்து பேச வேண்டும் சாமி என்ற சொல்லை பேசுவதற்கு முன்பும் பேசி முடித்த பின்பும் உச்சரிக்க வேண்டும்.

மது புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவர்கள் இந்த விரத  நாட்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டும் இவற்றை நிறுத்த இதை ஒரு பயிற்சி காலமாக கூட எடுத்துக்கொண்டு முற்றிலும் அதிலிருந்து வெளிவரலாம்.

மலைக்கு போகும் முன் கடைபிடிக்க வேண்டியது

அன்னதானம் செய்த பிறகு தான் மலைக்கு செல்ல வேண்டும் அதனால்தான் ஐயப்பனை அன்னதான பிரபு என்றும் அழைக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் தென்னங்கன்று மற்றும் மணி பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்தவுடன் அவற்றை கோவிலில்  செலுத்தலாம்.

48 நாட்கள் விரதம் மேற்கொண்டு ஐயப்பனின் கருணையால் பிறந்த குழந்தைகளுக்கு ஐயப்பனின் பெயரையே வைக்கக்கூடிய எத்தனையோ பக்தர்களை இந்த உலகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உடல் ரீதியான பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது இந்த விரத காலம் தான். மேலும் சபரிமலைக்குச் செல்லும் வழி கரடு முரடான பாதை மற்றும் அங்குள்ள சூழ்நிலைக்கு நம் உடல் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விரத முறைகள் பின்பற்றப்படுகிறது.

Recent Posts

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

19 minutes ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

23 minutes ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

50 minutes ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

1 hour ago

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

2 hours ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

2 hours ago