அற்புதமான தை அமாவாசை மக்கள் வெள்ளத்தில் ராமேஸ்வரம்..!

6

ராமேசுவரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை, மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடி வழக்கம்.

அதன்படி இன்றைய ஆண்டுக்கான  தைஅமாவாசையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு பின்னர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு  ராமர் தங்க கருட வாகனத்திலும், சாமி மற்றும் அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளிய நிலையில் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியானது  நடைபெற்றது.

கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலின் உட்புறத்தில் இருக்கும்  22 தீர்த்தங்களிலும் நீராடுவதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர். இதனை தொடர்ந்து சுவாமி -அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை நாள் முழுவதும்  திறக்கப்பட்டு இருந்தது.