சந்தன மாரியம்மன் கோவிலில் வெகுச் சிறப்பாக கும்பாபிஷேகம் இந்நாளில்…!

கன்னியாகுமரி மாவட்டம் சாட்டுபுதூரில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8 தேதி கும்பாபிஷேக விழா வெகுச் சிறப்பாக தொடங்குகிறது.

காலை 6 மணிக்கு மங்கள இசை மற்றும் தேவார திருமுறை பாராயணத்தை  தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பல  பூஜைகளும் சரியாக 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பமானது எடுத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து  இரவு 7.30 மணியளவில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.

9 தேதி அன்று 3 கால யாக சாலை பூஜை மற்றும் 10 தேதி காலை 4 கால யாக சாலை பூஜையை  தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடக்கின்றது.

இதனை தொடர்ந்து 11 தேதி காலையில் யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஆனது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சரியாக 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி ஆலயத்துக்கு கும்பாபிஷேகமானது வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.இதனை 12 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகின்றது.