சபரிமலை: மண்டல பூஜை ஆன்-லைன் முன்பதிவு..ஏமாற்றமடைந்த பக்தர்கள்.!

சபரிமலை ஐயப்பன் கோயிலியின் மண்டல, மகரவிளக்கு பூஜையின் தரிசனம் செய்யவதற்கான ஆன்லைன் முன்பதிவு இரண்டு நாட்களில் நிறைவடைந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையை முன்னிட்டு நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மண்டல விளக்கு பூஜைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களையும் அதன்பின், வார இறுதி நாட்களில் 2,500 பக்தர்களையும் அனுமதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஜையில், கலந்து கொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஞாயிறன்று தொடங்கியது. ஆனால், தொடங்கி இரண்டே நாளில் ஆன்-லைன் முன்பதிவு நிறைவடைந்தது. இதனால், பல பக்தர்கள் ஏமாற்றமடைந்தன.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.