இன்றைய போட்டியில் கலந்து கொள்ளும் அணியின் விபரங்கள்

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் ,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது . இப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.ஒரு போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது .இப்போட்டியானது கார்டிஃப்பில்  உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது .
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது.இப்போட்டியானது பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

author avatar
murugan

Leave a Comment