மலேசியாவின் புதிய பிரதமராக துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு….!

மலேசியாவின் புதிய பிரதமராக துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமது அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென பதவியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் அவர்கள் தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமராகினார்.

ஆனால் தற்பொழுது கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மொகைதின் யாசின் அவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பதவி விலகினார். இதனையடுத்து துணை பிரதமராக இருந்த  இஸ்மாயில் சப்ரி யாகூப் அவர்களை பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்பதாக மலேசியாவின் 9 ஆவது பிரதமராக  இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு  செய்யப்பட்டதுடன் இன்று பிற்பகல் இவருக்கான பதவியேற்பு விழாவும் நடைபெறவுள்ளது.

author avatar
Rebekal