துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு….! போலீசார் தடியடி…!

துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்ட, வஉசி சிலை திறப்பு விழாவில் சலசலப்பு. 

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர்.  அதாவது, ஒரு சமூகத்திற்கு அதாவது, 6 பிரிவுகளை  உட்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அந்த சமூகத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு  தெரிவித்து, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்த்தவர்கள் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன குரலையம், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

பின் அங்கு போலீசார் தடியடி நடத்தி அந்த கும்பலை கலைத்துள்ளனர்.  இதனால், போலீசாருக்கும், போராட்டாக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சலசலப்பால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின் விழா தொடர்ந்து நடைபெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.