அடுத்த முதல்வர்???அதிமுக அலுவலகம் புறப்பட்டார் ஓபிஎஸ்

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு  சில மாதங்களே எஞ்சி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்ற விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது.
இவ்விவகாரத்திற்கு  இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் வெடித்தாக தகவல் வெளியானது.அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்.,7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
அதன்படி,  இன்று முதல்வர் வேட்பாளரை அறிவிக்க  அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக நேற்று காலை முதல் சுமார் 18 மணி நேரம்  மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்,  ஒபிஎஸ் – இபிஎஸ் உடன் பலகட்ட ஆலோசனைகளை நடத்தினர்.
இந்த ஆலோசனை அதிகாலை 3 மணி வரை இந்த ஆலோசனை நீடித்த நிலையில்
இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் குறித்தும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் வருகை தர தொடங்கி உள்ளனர்.இந்நிலையில்  சென்னையிலுள்ள இல்லத்தில் இருந்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் புறப்பட்டார்.
author avatar
kavitha