வங்கக் கடலில் வரும் 7-ஆம் தேதி (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இது வரும் 8-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தற்போது நாளை உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகும் எனவும், 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானது எனவே, தென்கிழக்கு வங்ககடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் நாளைக்குள் கரை திரும்ப அறிவுறுத்த பட்டுள்ளது. அதேபோல மத்திய வங்க கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் 9-ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.