டெல்லியில் அதிகரித்து வரும் டெங்கு.. மொத்தம் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளதாக தகவல்..

டெல்லியில் கடந்த வாரம் 400-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது மொத்தம் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது.

டெல்லியில் கடந்த வாரத்தில் மட்டும் 412 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாவும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 693 டெங்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இதுவரை தேசிய தலைநகர் டெல்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவரை டெங்குவால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment