முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிப்பு… போராட்டத்தை அறிவித்த வைகோ..!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கபப்ட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்த்துள்ளார்.

இதுகுறித்து கூறிய வைகோ, லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்து சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமையாகும். எனவே வருகின்ற 11-ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் ஸ்தூபி அமைக்கப்பட்டது. நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிக்கப்பட்டது.

murugan

Recent Posts

ஐபிஎல்2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..!! லக்னோவிற்கு முதல் வெற்றியை கிடைக்குமா ..?

ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் 12-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த போட்டி லக்னோவில்…

2 hours ago

ஐபிஎல்2024 : மீண்டும் நிரூபித்த கொல்கத்தா ..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் KKR அபார வெற்றி ..!!

ஐபிஎல்2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு…

10 hours ago

ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம்: அண்ணாமலை விளக்கம்

Annamalai: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாக வீடியோ பரவிய விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம். மக்களவை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20…

11 hours ago

ஐபிஎல் 2024 : கோலியின் அதிரடியில் … கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு ..!!

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு…

12 hours ago

பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை

C.M. Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி. தர்மபுரி மக்களவை தொகுதியில்…

12 hours ago

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: ரூ. 10 லட்சம் சன்மானம்

Rameshwaram Cafe: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த மார்ச்…

13 hours ago