அதிகமான கண்காணிப்பு கேமரா கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்…!

அதிகமான கண்காணிப்பு கேமரா கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம். 

சமூகத்தில் நடக்க கூடிய கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தவிர்க்க காவல் அதிகாரிகள் பணியில் இருந்தாலும், அவர்களது கண்களுக்கு மறைவாக நடக்கும் சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், போர்ப்ஸ் இந்தியா என்ற ஊடகம் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களில் கண்காணிப்பதில் அதிகமாக கவனம் செலுத்தும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகபட்ச கேமராக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகரான டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு ஆயிரத்து 1,827 கேமராக்கள் உள்ளன.

மேலும் இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பெற்றுள்ளது. லண்டனில் ஒரு சதுர மைலுக்கு ஆயிரத்து 1,138 மிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னை பிடித்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சதுர மயிலுக்கு 610 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.