சென்னையை வீழ்த்தி முதலிடம் சென்ற டெல்லி அணி..!

டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் 13, டு பிளெசிஸ் 10 ரன் எடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் களம் கண்ட மொயீன் அலியும் 5, ராபின் உத்தப்பா 19 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு 55 ரன்கள் எடுக்க, இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தனர்.

டெல்லி அணியில் அக்சர் படேல் 2, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெல்லி 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக தவான் , பிரித்வி ஷா இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் பிரித்வி ஷா 18 ரன் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன் எடுத்து ருதுராஜிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர், களம் கண்ட அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை அதன்படி ரிபால் படேல் 18, ரவிச்சந்திரன் அஷ்வின் 2, ரிஷப் பண்ட் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப நிதானமாக விளையாடிய வந்த ஷிகர் தவான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன் மெயின் அலிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழக்க இறுதியாக டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 20 புள்ளி பெற்று டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.

author avatar
murugan