டெல்லி- சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர்.
டெல்லியிலிருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென குலுங்கியதால், விமானத்தில் பயணித்த பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிட்னி விமான நிலையத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் எந்தவித தீவிர காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.