தலைநகர் டெல்லியில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்.!

டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி முதலில் 21 நாள்கள் அதாவது ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 21 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தாக்கம்  குறையாததால் பின்னர் மீண்டும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை  நீடித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஊரடங்கு காரணமாக  மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 14 ,000 தாண்டியது.கடந்த 6 நாள்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லியில் கொரோனாவால் 1707 பேர் பாதிக்கப்பட்டும் , 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு  ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கருவி  பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan