உலகிலேயே டெல்லி தான் நம்பர்; லண்டன் 2-வது இடம் – முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்…!

ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகபட்ச சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உலகம் முழுவதும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகபட்ச சிசிடிவி கேமராக்கள் உள்ள 150 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் டெல்லி முதல் நகரமாக உள்ளது. டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1,826 சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்று முதல்வர் மேலும் கூறினார். ஒரு சதுர மைலுக்கு 1,138 சிசிடிவி கேமராக்களுடன் லண்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே லண்டன், சிங்கப்பூர் மற்றும் பாரிஸை விட டெல்லி மிகவும் முன்னேறியுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் 2,75,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தெருக்கள், பாதைகள், காலனிகள், RWS, பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவில், சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், மும்பையை விட டெல்லியில் மூன்று மடங்கு கேமராக்கள் உள்ளன.  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதில் இருந்து பெண்களுக்கான பாதுகாப்பு மேம்பட்டுள்ளது என்றார்.

குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகிவிடுவதால், குற்றச் சம்பவங்களைத் தீர்ப்பதில் போலீஸாருக்கும் உதவியாக உள்ளது. டெல்லியில் மேலும் 1,40,000 கேமராக்களை நாங்கள் பொறுத்தவுள்ளோம். இதைத் தொடர்ந்து, டெல்லியில் 4,15,000 சிசிடிவி கேமராக்கள் இருக்கும்” என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

author avatar
murugan