டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி

டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  உச்சத்தை தொட்டு வருகிறது.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் மட்டும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  20 பேருக்கு மேல் பயணம் பேருந்துகளில் செய்யக் கூடாது என்று டெல்லி அரசு அண்மையில் அறிவித்திருந்தது.இவ்வறிவிப்பினால்  பேருந்துகளை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.இந்நிலையில் இதனைக் கருத்தில் கொண்ட டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்  தனது டுவிட்டர் பக்கத்தில்  நவம்பர் 1ஆம் தேதி(இன்று) முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்தே செல்லலாம் என்று அறிவித்துள்ளார். ஆனால் யாரும் பேருந்துகளில் நின்றபடி செல்வதற்கு அனுமதி இல்லை கிடையாது என்று கூறியுள்ளார்.மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பதிவிட்டு அறிவுறுத்தியுள்ளார்.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube