தலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.!

24 மணிநேரத்தில் மட்டும் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

By manikandan | Published: Jul 09, 2020 11:10 PM

24 மணிநேரத்தில் மட்டும் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 24 மணிநேரத்தில் மட்டும் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கையானது 1,07,051-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 24 மணிநேரத்தில் 45 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 3,258ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு சிறிது நிம்மதி தரும் செய்தி என்னவென்றால், இதுவரை 82,226 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc