நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.! அரசு அறிவுறுத்தல்.!

நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.! அரசு அறிவுறுத்தல்.!

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  இன்று காலை 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 50 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில்  1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலரை தொடர்பு கொண்ட நிலையில் பலரை  மாவட்ட நிர்வாகத்தினால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அரசு கூறியுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube