டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி இணைந்து போராடுவோம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்தார்.

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில்  முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

 

 

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே  அரசுப் பணிகளை கவனிக்கிறார்.இன்றும்  புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.

இன்று  முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்தார்.

இதன் பின்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி இணைந்து போராடுவோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Leave a Comment