நீண்ட காலமாக செயலில் இல்லாத கணக்குகள் நீக்கம்..! கூகுள் அதிரடி முடிவு..!

பாதுகாப்பு காரணங்களுக்காக செயலில் இல்லாத கணக்குகளை கூகுள் நீக்க உள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவராலும் கூகுளின் ஜிமெயில் (Gmail), யூடியூப் (Youtube), டிரைவ் (Drive) போன்ற பயன்பாடுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்நுழைவதற்கு கூகுள் கணக்குத் தேவைப்படும். இதனால் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால், செயல்படாமல் இருக்கும் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை டிசம்பர் முதல் நீக்கவுள்ளது. இந்த முடிவு தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பள்ளிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களின் கணக்குகளைப் பாதிக்காது.

மேலும், கணக்குகள் நீக்கப்படுவதற்கு முன்னர் பயனர்களுக்கு கூகுளிலிருந்து பல அறிவிப்புகள் அனுப்பப்படும். இதனை பொருட்படுத்தாமல் இருக்கும் பயன்படுத்தப்படாத கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.